11 Jan 2023

காணிப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லாமல் இப்பொழுதிருக்கும் சாதகத்தைப் பயக்படுத்தித் தீர்ப்பதே புத்திசாலித்தனம்.

SHARE

காணிப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லாமல் இப்பொழுதிருக்கும் சாதகத்தைப் பயக்படுத்தித் தீர்ப்பதே புத்திசாலித்தனம்.

இப்பொழுது வரை புரையோடிப் போயிருக்கும் நீண்ட  காலக் காணிப் பிரச்சிiனையை இனிவரும்; இளைய சந்ததியினருக்கும் விட்டுவைத்துச் செல்லலாகாது என தான் அவாக் கொண்டு கருமமாற்றுவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊடகவியலாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் கடந்த கால அனுபவக் கற்றல் விளக்கமளிக்கும் சமர்ப்பணத்தில் அவர் பங்குபற்றுநராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் அமர்வு அதன் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான  கே. நிஹால் அஹமட் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கலந்துரையாடல் நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட காணி இழந்தோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், துறைசார்ந்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

நிகழ்வின் வளவாளர்களாக சட்டத்தரணியும் செயற்பாட்டாளருமான சரளா எம்மானுவேல்  சந்துன் துடுகல ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப். நான் ஊடகத்தில் பணியாற்றிய காலம் தொடக்கம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டிருக்கும் இன்றுவரை இந்த காணிபிரச்சினைத் தீர்வுக்காக செயற்பட்டு வருகின்றேன். காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியும் அர்த்புஷ்டியுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்திருக்கிறது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்வின்றித் தொடரும் இந்தக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும் முடிவுகள் வரவேண்டும்.

காணியை இழந்த பல காணிச் சொந்தக்காரர்கள் தங்கள் காணிகளை அடைந்து கொள்ள முடியாமலேயே மரணித்து விட்ட துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது பிள்ளைகளுக்கு தங்களது காணிகள் எங்கே காணி இருக்கிறது என்றும் தெரியாது. காணிகள் விடயத்தில் சகல சமூகத்தாரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வனஜீவராசிகள் திணைக்களம். வனப் பரிபாலனத் திணைக்களம், என்பவை  காணியை இழந்த விவசாயிகளின் எதிர்முகாம்களாக இருந்து செயற்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. காணித் தீர்வு விடயத்தில் இடைஞ்சலாகவும் பெரும் பிரளயத்தை உண்டுபண்ணுபவர்களாகவும் இவ்விரு திணைக்களத்தாரும் செயற்பட்டு வருகின்றார்கள்.

உணவுப் பஞ்சம் பொருளாதார நலிவு ஆகிய நாட்டு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இப்பொழுது ஜனாதிபதி அமைச்சரவை எடுத்த நிலைப்பாடுகளால் காணிப் பிரச்சினைக்கு ஒருபடியாக தீர்வுகளைப் பெறக்கூடிய சாதக நிலை கூடுதலாகக் காணப்படுகின்றது.

காணிப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுபவதற்கான முடிவு நிலைக்கும் சில இடங்களில் வந்துள்ளேன். காணி விடுதலை என்றாலே வடமாகாணத்தை சம்பந்தப்படுத்திப் பார்க்கும் ஒரு பார்வை உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்பாயவும் காணிகள் விடுவிப்பதில் கரிசனையாக இருந்தார். ஆனால் அது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவில்லை. இப்பொழுது அம்பாறை மாவட்டம் கரிசனையில் உள்ளது. காணி விடுவிப்பு ஆணைக்குழு விரைவில் அம்பாறை மாவட்டத்ற்கு பிரசன்னமாகும் என நம்புகிறேன்.

அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் துறைசார்ந்த அறிவற்ற நிலைமையே காணிப் பிரச்சினைகள் இழுபட்டுச் செல்வதற்கு பிரதான காரணமாய் அமைந்துள்ளது.” என்றார்.

அங்கு கலந்துரையாடலின்போது கருத்துத் தெரிவித்த அமைப்பின் அம்பாறை மாவட்ட நில உரிமைக்கான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும்  என்று துறைசார்ந்த நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கின்ற  இச்சந்தர்ப்பத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உணவு உற்பத்தியில் சிறப்பான பங்கை வகித்த பொன் விளையும் பூமிகளான எமது காணிகள் அதிகாரிகளால் தடுக்கப்பட்டிருக்கின்றன.

திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில்  4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.

இது விடயமாக கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் இந்தக் காணிகளை மீட்டெடுப்பதற்கான முன் முயற்சிகள் தொடரும் என அங்கு வலியுறுத்தப்பட்டது
SHARE

Author: verified_user

0 Comments: