மட்டக்களப்பில் மழை குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு – தொடர்ந்து மழை பெய்யும் சாதியம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம அதிகரித்துள்ளதுடன் மழைநீர் வழிந்தோட முடியாமல் வடிகான்களில் தேங்கியுள்ளதனால் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 7அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 9அங்குலமும், இக்குளத்தில் ஒரு அங்குலம் அளவில் மேலதிக நீர் வெளியேறுகின்றது, வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலமும், இக்குளத்தில் 2அங்கு மேலதிக நீர் வெளியேறுகின்றது, கித்துள்வெவகுளத்தின் நீர்மட்டம் 7அடி ஒரு அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலமும், அக்குளத்தில் 12 அங்குல மேலதிக நீர் வெளியேறுகின்றது, வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 10அடி ஒரு அங்குலமும், புணாணை அணைக்கட்டு 3அடி 3அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 27அடியும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலமுமதக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்கிழமை(20) காலை 8.30 மணிவரையில் மட்டக்களப்பில் 33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிலஇடங்களில் 50மிமீ. க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு தென்வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகநிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்குத் திசையில் மெதுவாக சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் தென் விரிகுடா ஆழம்கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வங்காள வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50கிலோ மீற்றர் 60 வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடல்சார் நடவடிக்கைகளில் தொடர்பாக ஈடுபடும் போது இவ்விடயம் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
காங்கேசந்துறையிலிருந்து கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில்வரையான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30- 40கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50- 55கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பலமான நேரங்களில் கடற்பகுதிகளில் காற்று வீசுவதுடன் அவ்வப்போது அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காண காணப்படும். என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment