25 Dec 2022

மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலயத்திற்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் மின்விசிறிகள் அன்பளிப்பு.

SHARE

(மாளிகைக்காடு நிருபர் )


கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி ஒரு தொகுதி மின்விசிறிகளை கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினருமான, மெட்றோபொலிட்டன் கல்லூரி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நளீர் தலைமையிலான பாடசாலை சமூகத்திடம் தனது அலுவலகத்தில் வைத்து இன்று (25) கையளித்தார். அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளரும், மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளருமான நூருல் ஹுதா உமர் தலைமையில் இடம்பெற்ற "மாளிகை மரகதங்கள்" நிகழ்வில் வைத்து நூருல் ஹுதா உமர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க பாடசாலை கேட்போர் கூடத்தின் நீண்டநாள் தேவையாக இருந்த மின்விசிறிகளை மாணவர்களின் தேவை கருதி உடனடியாக நிவர்த்திக்கும் வகையில் ஒரு தொகுதி மின்விசிறிகளை கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், மெட்றோபொலிட்டன் கல்லூரி முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வழங்க முன்வந்திருந்த நிலையிலையே இன்று இந்த மின்விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

பாடசாலையின் பௌதீக வளங்களின் மேம்பாட்டுக்கும், இதர கல்வி அபிவிருத்திக்கும் தொடர்ந்தும் கல்முனை மாநகர முன்னாள் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பாடசாலை பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைத்த கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட அவர் தன்னால் முடியுமான சகல உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பாடசாலை சமூகத்திடம் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர் ஏ.எம். நளீம், சிரேஷ்ட ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் பிரத்யோக செயலாளர், இணைப்பாளர், பாடசாலை பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: