சுவாமி விவவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்து 125வது ஆண்டை முன்னிட்டு களுதாவளையில் நடைபெறும் போட்டி நிகழ்வுகள்.
சுவாமி விவவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் செய்து 125வது ஆண்டை முன்னிட்டு மட்டக்ககளப்பு களுதாவளை இந்து மாமன்றத்தின் ஏற்பட்டில் களுதாவளையில் செயற்பட்டுவரும் 8 அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே பல்வெறு போட்டி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் எனும் தலைப்பிலான போட்டி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(27) களுதாவளை ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் நடைபெற்றது.
களுதாவளை இந்து மாமன்றத்தின் தலைவர் ப.குணசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுதாவளையில் இயங்கிவரும் 8 அறநெறிப் பாடசாலைகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவியர்கள் இதன்போது போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தனர். இப்போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டும் மாணவர்களுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள சுவாமி விவேகானந்தரின் இலங்கைக்கு விஜயம் செய்து 125 வது ஆண்டை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவின்போது பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம், ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிழ்வுகழ் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment