மெளலவி எம்.பீ.எம். பாஹிம் (பலாஹி) அவர்களின் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் காரிகை இலக்கியக் கழக செயலாளர் திருமதி ஹாஜறா கலீலுர் ரஹ்மான் ஆசிரியை அவர்களால் வரவேற்புரையும், ஸ்தாபகத் தலைவி இலக்கியச் சுடர் திருமதி ஜாஹிதா ஜலால்தீன் அவர்களினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டன.
அதன்பின் திருமதி.ஜெஸ்மின் றமீஸ் அவர்களால் வாழ்த்துக் கவியும், சுட்டிக் குழந்தை நூர் அல்ஹயாவினால் அபிநயப் பாடலும், காரிகை கலை இலக்கிய கழக உபதலைவி திருமதி. அஜீரா கலீல்தீன் அவர்களால் ஓரங்க நாடகம் ஒன்றும் மிக சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.
அத்துடன் திருமதி. எஸ்.எச்.சப்ரினாவின் சிறுகதை வாசிப்பு, திருமதி. ஜுஸ்லா றமீஸ் அவர்களின் பின் நவீனக் கவிபாடல் என்பன இடம்பெற்றன.
ஆசிரியை திருமதி.பௌசியா றிசான் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட கதம்பம் நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியூட்டியதுடன் தொடர்ந்து காரிகை கலை இலக்கிய கழக செயலாளர் திருமதி. ஹாஜறா கலீலுர் ரஹ்மான் அவர்களால் இனிமையான கவிதை ஒன்றும் வாசிக்கப்பட்டது.
அதன் பின்னர் திருமதி. பௌசானா பிஸ்றுல் ஹாபி ஆசிரியை நெறியாள்கை செய்து மாணவிகளால் சிறப்புற வழங்கப்பட்ட நாட்டார் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிதிகள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச் செல்வன் அவர்கள் உரையாற்றியதுடன், திருமதி.ஜெஸ்மின் றமீஸ் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சிகள் அனைத்தையும் திருமதி. முப்லிஹா பிர்தவ்ஸ் ஆசிரியை அவர்கள் நெறியாள்கை செய்து தொகுத்து வழங்கியிருந்தார்.
0 Comments:
Post a Comment