ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையில் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு மன்றேசா கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை(13) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடபெற்ற இந்நிகழ்வில் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ஸிரீன் சரூர் மற்றும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புகாரி முகமட் ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதன்போது கடந்த ஆண்டு இலங்கை தொடல்பில் ஜனிவா மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் நறைவேற்றப்பட்ட மீளிணக்கம், பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment