6 May 2022

மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையினால் 1500 வேம்பு மரக்கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையினால் 1500 வேம்பு மரக்கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வு.

ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் " ஆளுக்கொரு மரம் நடுவோம் இயற்கையை நேசிப்போம் "  எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்   கோறளைப்பற்று (தெற்கு) கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள மட்/ கோராவெளி கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் 1500 கற்பக விருட்ச வேம்புமரக்கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வு கோறளைப்பற்று (தெற்கு) கிரான் பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் லோ.தீபாகரன், செயலாளர் நே.பிருந்தாபன், கலாசார உத்தியோகத்தரும் அறப்பணி சபையின் ஏறாவூர் பற்று பிரதேச இணைப்பாளருமான கே.எஸ்.ஆர்.சிவகுமார், கோராவெளி கிராம உத்தியோகத்தர் கே.அச்சுதன் மற்றும் கோராவெளி கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு  வேம்பு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற பல நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இக் கோராவெளி அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் வேம்பு மரக்கன்றுகளை நடுகை செய்யும் நீண்டகால இலற்சியத்தின் அடிப்படையில் இம்மரநடுகை திட்டம் ஆனந்தகிரி அறப்பணி சபையினால் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: