8 Apr 2022

குழாய் மூலமான குடிநீர் வசதி

SHARE

குழாய் மூலமான குடிநீர் வசதி.

மட்டக்களப்பு மாவட்டம் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் இதுவரையில் குடிநீர் இணைப்பு வசதிகள் இல்லாமல் இருந்து வந்த மக்களுக்கு அந்த வட்டாரத்தின் பிரதேச சபைஎறுப்பினர் மே.வினோராஜின் முயற்சியினால் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் வியாழக்கிழமை(07) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அப்பகுயிலுள்ள மக்கள் மேற்படி பிரதேச சபை உறுப்பினரிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க குறித்த பிரதேச சபை உறுப்பினர் மேற்கொண்ட முயற்சியின் பலானாக கிழக்கு மாகாண சபையின் 750000 ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்பகுதியில் இதுவரையில் குடிநீர் இணைப்புக்கள் இன்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்த 126 குடும்பங்களுக்கு தேசி நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படவுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வு











ளுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. இதன்போது அந்த வட்டார பிரதேசபை உறுப்பிகர் மே.வினோராஜ், அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு செய்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

தாம் இதுவரைகாலமும் சுத்தமான குடிநீரின்றி பெரும் அல்லலுற்று வந்ததாகவும். தமது நீண்டநாட் கோரிகை தற்போது நிறைவேறுவதையிட்டு சந்தோசமடைவதாகவும். தமது கோரிக்கையை ஏற்று குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மே.வினோராஜிக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: