கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் நினைவேந்தல்.
கடந்த 2019ஆம் ஆண்டு சித்திரை மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று வியாழக்கிழமை(21.04.2022) 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளது இத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் மட்டக்களப்பில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களகப்பு கல்லடி பாலத்தின் அருகில் உள்ள உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி மற்றும் தீபச்சுடர் ஏற்றி அனுஸ்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இத்தாக்குதல் இடம்பெற்று எதுவித தீர்வுகளும் கிடைக்கப்பெறாமையினை கண்டித்து அமைதியான முறையில் அவர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இனமத பேதங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment