சமூக
வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலும் கருத்தரங்கும் இன்று
மட்டக்களப்பில் இடம்
பெற்றது.
இரண்டு
நாட்கள் கொண்ட
வதிவிட
கருத்தரங்காக இது
இடம்
பெற்றது.
பொறுப்புணர்வுடன் கூடிய விதத்தில் சமூக வலைத்தளங்களின் பாவனையை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் தகவல் துறை தொடர்பான அறிவினை பயன்படுத்துதல்,
டிஜிட்டல் உரிமைகள் சமூக
அரசியல், பொருளாதார மற்றும் கலாசார
ரீதியிலான மனித
உரிமைகளுடன் இயற்கையாகவே இணைந்து இருப்பதுடன் பிரிந்து வேறுபடுத்த முடியாத அளவுக்கு அந்த
உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு அங்கீகரித்தல் எனும்
குறிக்கோளுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இக்
கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இவ்வாறான கருத்தரங்கு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவனங்களின் பொறுப்பு, சிவில் அமைப்புக்களின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பு, சமுக வலைத்தளங்களின் பொறுப்பு பற்றியும் இன்றைய முதல்நாள் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது
இந்நிகழ்வில் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment