விவசாயிகளுக்கு தானிய விதைகள் வழங்கி வைப்பு.
விவசாயத்திணைக்களமும், நீர்ப்பாசனத் திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தும் பிசிப் (Pளைiநி) திட்டத்தின் கீழ் நிலக்கடலை, மற்றும் கௌபி விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை(09) மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலையடிவட்டை மற்றும் கற்சேனை ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
இதன்போது விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய ப.பணிப்பாளர் பேரின்பராசா, மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் த.மேகராசா, தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர ச.டிசாரா, மற்றும் மாதவன், பாடவிதான உத்தியோகஸ்த்தர், நிர்ப்பாசனகள உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாலையடிவட்டையில் 50 விவசாயிகளுக்கும், நிலக்கடலை 32 ஏக்கரிலும், கௌபி 22 ஏக்கரிலும், கற்சேனையில் 30 விவசாயிகளுக்கும், நிலக்கடலை 8 ஏக்கரிலும், கௌபி 4 ஏக்கரிலும், செய்கை பண்ணுவதற்கு இதன்போது தானிய விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment