5 Oct 2021

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடாக மேற்கொள்ளப்பட்ட கன்னன்குடா துறையடி உள்வீதி பிரதேச செயலாளரிடம் கையளிப்பு.

SHARE

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடாக வவுணதீவுப் பிரதேசத்தின் கன்னன்குடா கிராமத்தில் அக்கிகிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் துறையடி உள்வீதிக்கு கிறவல் இட்டு செப்பனிடப்பட்டு அதனை பிரதேச செயலாளரிடம் உத்தியோக பூர்வமாக திங்கட்கிழமை(04) கையளிக்கப்பட்டது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை பொருளாளர் .சக்திவேல் இத்திட்டத்தை உத்தியோக பூர்வமாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனிடம் கையளித்தார்.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் .வசந்தராசாகிளை நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி பி.வேணுஷாதிட்டத்திற்குப் பொறுப்பான திட்ட உத்தியோகஸ்த்தர் எஸ்.ருத்திராஜ்மற்றும் கிளை உத்தியோகஸ்த்தர் .விஸ்வநாத்உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: