5 Apr 2021

புதிய சியோன் தேவாலத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள்.

SHARE

புதிய சியோன் தேவாலத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள்.

இயேசு பிரானின் உயிர்ப்பை  நினைவுகூறும்  உயிர்த்த ஞாயிறு (04) விசேட ஆராதனைகள்  மட்டக்களப்பு  புதிய சியோன் தேவாலயத்திலும் இடம்பெற்றது.

சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்றாற்போல் மிகச் சிறப்பான ஒழுங்குபடுத்தலுடன் இடம்பெற்றது.

அதிகளவிலான இறைவிசுவாசிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான ஆராதனையில் இயோசுபிரானின் உயிர்ப்பை நினைவு கூறும் திருப் பாடல்கள் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, பிரதம போதகரினால்  பிரசங்கம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஆராதனை நிறைவடைந்தது.

தேவாலயத்தின் தொண்டர்களினதும்,பாதுகாப்பு படையினரதும் பலத்த பாதுகாப்பின் மத்தியில் குறித்த விசேட ஆராதனை இடம்பெற்றது.

















 

SHARE

Author: verified_user

0 Comments: