4 Jan 2021

இடமாற்றம் பெற்று செல்லும் பங்கு தந்தை சி வி .அன்னத்தால் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு.

SHARE

இடமாற்றம் பெற்று செல்லும் பங்கு தந்தை சி வி .அன்னத்தால் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு.

மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் பங்கு தந்தை சி வி .அன்னத்தால் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும் புதிய பங்குத்தந்தை ஜோஜ் ஜீவராஜ் அடிகளாரை வரவேற்கும் நிகழ்வும் இன்று ஆலயத்தில் நடைபெற்றது

 மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அடையாளமாக விளங்கும் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பங்குத்தந்தையாக கடந்த மூன்று வருடங்களாக ஆன்மீக பணியினை மேற்கொண்டு அக் காலப்பகுதியில் ஆலயத்திற்கு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு ஆலயத்தினை புணர்த்தாபனம் செய்த அடிகளாரை கௌரவிக்கும் வகையில் பங்கு மக்களின் ஏற்பாட்டில் ஆலயத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டு அடிகளாரினால் திரை நீக்கம் செய்யப்பட்டு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது

திருப்பலியை தொடர்ந்து மரியாள் பேராலய பங்கு மக்கள் மற்றும் ஆலய மேற்புபனிச் சபையினர் இணைந்த ஏற்பாட்டில் அடிகளாரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் புதிய பங்குத்தந்தையாக வருகைதந்துள்ள அருட்தந்தை ஜோஜ் ஜீவராஜ் அடிகளாரைமாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது

இந்நிகழ்வில் தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய புளியந்தீவு மரியாள் பேராலய பங்கு மக்கள் , பங்கு மேற்பு பனிச்சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: