19 Nov 2020

கந்தசஷ்டி விரதத்தினையும் ஆலயத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே அனுஷ்டிக்கவும் - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகம்.

SHARE
கந்தசஷ்டி விரதத்தினையும் ஆலயத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே அனுஷ்டிக்கவும் - கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகம்.
வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதம் எவ்வாறு நடைபெற்று முடிந்ததோ அதே போன்று தற்போது அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்ற கந்தசஷ்டி விரதத்தினையும்  அடியார்கள் ஆலயத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே வழிபாடுகளை செய்து விரதங்களை அனுஷ்டித்து கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்தோடு வருடம் தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் சூரன் போரானது  இவ்வாண்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி அச்சூரன் போர் விழாவும் நடைபெறாது. அந்த வகையில் கிராமப்புறங்களில் காணப்படும் ஆலயங்களிலும் இந்த நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் அத்தோடு சூரன்போர் விழாவை இவ்வாண்டில் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கொக்கட்டிச்சோலை  ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

சுகாதார உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க எங்களது பாதுகாப்பிற்காகவும் அடியார்களது  பாதுகாப்பிற்காகவும் செயற்பட்டு இந்தக் கொடிய நோயிலிருந்து விடுபட வேண்டும் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய  வண்ணக்கரும் செயலாளருமாகிய  இளையதம்பி சாந்தலிங்கம் தெரிவத்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: