மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணல்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் வெள்ளிக்கிழமை (09) உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலையில் இருந்து மாவடி முன்மாரி பகுதியை நோக்கி மணல் ஏற்றுவதற்காக சென்ற உழவு இயந்திரம் முச்சக்கர வண்டி ஒன்றிற்கு வழிவிட முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம் புரண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய ஜே.டிலக்ஷனும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதையுடைய ஜீ.தினுஜனும் குறித்த உழவு இயந்திரத்தில் எட்டும் பேருடன் பயணித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ள நிலையில் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மகிழடித்தீவு வைத்தியசாலையிலும் மற்றைய இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருவதுடன், சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைகள் கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment