27 Jul 2020

தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படுகின்றது. - பார்ள் நிறுவனம் அறிக்கை

SHARE
மக்களை வெளியேற்றி சகல சமுதாயங்களையும் பாதிக்கும் காணியற்ற நிலைமையினை உருவாக்குவதற்கு தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படுகின்றது. - பார்ள் நிறுவனம் அறிக்கை.
மக்களை வெளியேற்றி சகல சமுதாயங்களையும் பாதிக்கும் காணியற்ற நிலைமையினை உருவாக்குவதற்கு தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படுவதாக  காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணி செயலணி குறித்து காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினால் Pநழிடநள’ யுடடயைnஉந கழச சுiபாவ வழ டுயனெ (Pயுசுடு)  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இஅந்த கிழக்கு மாகாண  செயலணியினை உருவாக்கியமை நிறைவேற்று அதிகாரத்தினைச் சட்ட உரிமையின்றிப் பயன்படுத்தியமையாகும் என்பதுடன் இது ஜனநாயக நிறுவனங்களைப் புறக்கணிக்கின்ற செயலுமாகும்.

அரச நிறுவனங்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் அல்லது சவால்கள் பொது நிறுவனங்களுக்கு இயலுமான நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் தீர்க்கப்படவேண்டுமேயன்றி அவற்றினை தேவைக்கு மேற்பட்டதாக ஆக்குவதால் தீர்க்கப்படலாகாது.

தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்;களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படும்  பல சந்தர்ப்பங்களை Pயுசுடு ஆவணப்படுத்தியுள்ளது.

விசேடமாக இந்தத தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அமைதியின்மையினை உருவாக்கிச் சிறுபான்மைச் சமுதாயங்களை அச்சுறுத்தி அற்ப அரசியல் இலாபம் தேடுவது சகல இலங்கையர்களினாலும் எதிர்க்கப்படவேண்டியதொன்றாகும்.

காணி ஆளுகை நிர்வாகம் நியாயமானதாகவும் நீதியானதாகவும் இருக்க வேண்டும்.

நமது நிறுவனத்தினால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட பரந்த கலந்தாலோசிப்பினைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மக்களின் காணி பொலிஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை Pயுசுடு நினைவுபடுத்துகின்றது:

பரிந்துரை

சிறுபான்மைச் சமுதாயங்கள் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்திவரும் காணிகளில் இருந்து அவர்கள் பிரிக்கப்படலாகாது.

சிறுபான்மையினரை இடம்பெயர்ப்பதற்காக காட்டுயிர்களைப் பாதுகாத்தல் என்றும் வனப்போர்வையினைப் பாதுகாத்தல் என்றும் போலியான தொல்லியல் சான்றுகளைக் காட்டுவது நிறுத்தப்படவேண்டும்.

இனத்துவ சமயப் பன்மைவாதத்தினை நிலைகுலையச் செய்கின்ற காணி மீதான தனியுரிமைக் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்;காகத் தொல்லியலும் வரலாறும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமுதாயங்களின் சமூக, கலாசார அரசியல் சகவாழ்விற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொல்பொருள் வரலாறு சூழ்ச்சித் திறனுடன் கையாளப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

செயலணி பொது நிதியினை வீணடித்து, செய்த வேலையினையே மீண்டும் செய்வித்து, இலங்;கையின் தொல்பொருள் அபிவிருத்தியினுள் அரசியல் பக்கச்சார்பினை ஏற்படுத்துகின்றது.

தொல்பொருள் போன்ற விடயங்களை இராணுவமயமாக்குவதன் அபாயம் என்னவென்றால் இது தொழில்வாண்மையினைச சீர்குலைத்து ஏற்கெனவே இப்பரப்பில் இயங்கிவரும் அரச நிறுவனங்களின் தகைமையினைக் கீழறுக்கின்றது.

முறையற்ற ஓர் அமைப்பாகவும் நாடாளுமன்ற மேற்பார்வையின்றியும் இருக்கும்

இச்செயலணி அதன் தீர்மானங்களினால் பாதிக்கப்படுகின்ற இலங்கையர்களின் மனதில் சந்தேகத்தினை உருவாக்கும்.

செயலணியில் பெண்களின் பிரதிநிதித்துவமோ அல்லது இனத்துவ சமயச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவமோ இல்லை.

மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவத்தினால் ஏற்கெனவே கடுமையான துயரங்களுக்கு முகங்கொடுத்து அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு ஆளாகிவரும் மக்கள் சமுதாயத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தச் செயலணி பங்களிப்பு வழங்கவில்லை. மாறாக எதிர்மாற்றமானதையே செய்கின்றது.

செயலணியின் உறுப்பாண்மையினை நோக்குகையில் சிறுபான்மையினரின் நலன்களைக் காவுகொடுத்து சிங்கள பௌத்த நலன்களை முன்னுரிமைப்படுத்துகின்றமையினையே அது சுட்டிநிற்கின்றது.

செயலணியில் இராணுவத்தினையும் சட்ட அமலாக்கல் அதிகாரிகளையும் உள்ளடக்கியுள்ளமை, செயலணியின் தற்றுணிபு தேவையெனக் கருதுகையில் ஆயத வன்முறையினைப் பயன்படுத்தச் சட்டரீதியாக ஆணை வழங்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்கள் இச்செயலணியின் காலடியில் சேவைசெய்யக் காத்திருக்கின்றன எனும் செய்தியினை வழங்குகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: