இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் ஏற்பாட்டில் வடிவமைக்கப்பட்ட பெட்டிக்கடைகள் வழங்கி வைப்பு.
குருக்கள்மடம், துறைநீலாவணை, கோவில்போரதீவு, மற்றும், மண்டூர், ஆகிய இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நால்வருக்கு இவ்வாறு பெட்டிக்கடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
வீதி ஓரங்களில் தகரக் கொட்டகைகளிலும், சிறிய மேசை மீதும் தாம் இதுவரைக காலமும் சிறிய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு தமது குடும்பத்தைப் பாதுகாத்து வந்த தமக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இன்று தமக்கு நிரந்தர வீதியோர பெட்டிக்கடை வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளமையானது எமக்கு மிகுந்த சந்தேசத்தை அளிப்பதாகவும், இதனால் தமது வாழ்வாதரம் மேலோங்கும் என எதிர்பார்ப்பதாகவும், பயனாளிகள் இதன்போது தெரிவித்தனர்.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நீண்டகாலமாக இருந்து இவ்வாறான பல சேவைகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment