மட்டக்களப்பு வவுணதீவில் பொலீஸ் சாஜன் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும் மட்டக்களப்பு புதூரில் வசித்துவரும் 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான புதன்கிழமை (05) இரவு வவுணதீவு ஆயித்தியமலை வீதியிலுள்ள 3 ஆம் கம்டை பிரதேசத்தில் தனது பண்ணையினை சென்றிருந்த நிலையில் அன்றயதினம் இரவு 11 மணியளவில் பண்ணையில் இருந்து வீதிக்கு வந்தபோது அங்கு இருவர் பதுங்குவதை கண்டு, யார் எனவும் கேட்ட போது அவர்கள் மது அருந்துகிறோம் எனசார்ஜனிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மது அருந்தியிருந்த சந்தேக நபர்களுக்கும் குறித்த பொலிஸ் சாஜனுக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டதையடுத்து சாஜன் மீது இருவரும் அங்கிருந்த பொல்லால் தலையில் தாக்கியதையடுத்து அவர் வீதியில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரின் உடலை இழுத்து வீதியின் ஓரத்தில் போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர் என இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும் ஆயித்தியமலை வடக்கில் வசித்துவரும் 31 வயதுடைய முகமட் அஸ்மி, வவுணதீவு ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் என்பவர்களின் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளனர்.
பொலிஸ் சாஜனின் தாக்குதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முகமட் அஸ்மி, அடிகாயங்கள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment