கிழக்கு மாகான ஆளுநர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் சந்திப்பு.கிழக்குமாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது பணியாட்கள் தொகுதியினருடன் எதிர்வரும் 26.02.2020 புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மக்கள் பணிக் காரியாலயத்தில் பொதுமக்களை சந்திக்கவுள்ளார்.
பொதுமக்களின் குறைபாடுகளை ஆராய்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இம்மக்கள் சந்திப்பு மாதாந்தம் நடைபெற்று வருகின்றது. இதற்கு முற்பட்ட காலங்களில் பதவிவகித்த ஆளுநர்கனைவிட புதிதாக பதவியேற்றுள்ள ஆளுநர் அனுராதா யஹம்பத் மக்கள் காலடிக்கு வந்து அவர்களது குறை தீர்க்கும் செயற்பாடானது வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் கருதுகின்றனர்.
0 Comments:
Post a Comment