1 Feb 2020

அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக வருகைதந்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இன்று (1)மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்  கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து உரையாடிய அரசாங்க அதிபருக்கு மாவட்டத்தின் சகல வழிகளிலும் தான் ஒத்தாசையாக இருந்து உதவி புரியவுள்ளதாகவும் கூறினார் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் சாதிமத பேதங்களுக்கு அப்பால் மாவட்டத்தில் சகலருக்கும் சமமான சேவையினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்


இலங்கை நிர்வாக சேவையில் 29வருட அனுபவம் வாய்ந்தவரும்  மட்டக்கப்பு மாவட்டத்தினை தனது சொந்தமாவட்டமாக கொன்டவருமான அரசாங்க அதிபர் மாவட்டத்தின் அபிவித்தியின் பால் பற்றுடன் செயல்படவேண்டும் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஆசிவழங்கினார்.





SHARE

Author: verified_user

0 Comments: