போர் காலச்சூழலில் யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எவ்வாறான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை பெறும் கலந்துரையாடல்.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணியமூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இழப்பிட்டுக்கான அலுவலகத்திடம் இருந்து டாக்டர் ஜே.எம்.சுவாமிநாதன், பணிப்பாளர் எஸ்.எம்.பதூர்தீன் மற்றும் நிபுணர் சேகர், சுமித்திரா செல்லத்தம்பி, அருண் பிரதிபன், நிருத்தனி சிவலிங்கம், ஆகியோர் வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்று இழப்பிடுகளுக்கான நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவான சட்டத்தினை பாராளுமன்றத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகவே இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
போர் காலச்சூழலில் யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எவ்வாறான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை மக்களிடமும் இருந்து இதுவரை யாழ்ப்பாணம், கிளிநோச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், ஆகிய மாவட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு இறுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
இவ் இழப்பீடுகளுக்கான அலுவலகமானது பாராளுமன்றத்தில் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் இழப்பிட்டுக்கான அலுவலகமும் திறக்கப்பட்டு மக்களுக்கு காணி.வீடு மற்றும் உறவினர்களை இழந்த குடும்பங்களை சார்ந்தவர்கள் ,பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர் ,யுத்த பாதிப்பினால் அங்கவீனமானவர்கள் ஆகியோருக்கு எவ்வாறான இழப்பீடுகள் தேவை என அறிந்து சட்டமூலமாக்கி அதன் மூலமாக மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வகுத்துள்ளது.
0 Comments:
Post a Comment