அன்ரன் பாலசிங்கத்தின் 13 வது ஆண்டு நினைவஞ்சலி.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் 13 வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் நா.தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், ச.சாந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து காலம்சென்ற சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கமும் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment