8 Jul 2019

மட்டக்களப்பில் நடைபெற்ற நாடகமும் அரங்கியலும் நூல் வெளியீட்டு விழா

SHARE
மட்டக்களப்பில் நடைபெற்ற நாடகமும் அரங்கியலும் நூல் வெளியீட்டு விழா.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆசிரியரும், போரதீவுப்பற்று பிரதேச கலைஞரும் ஓவியருமான  தங்கராசா நாகேந்திரானால் எழுதப்பட்ட  “நாடகமும் அரங்கியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (07)  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு, அதிதிகளாக போரதீவுப்பற்றுபிரதேச பிரதேசசெயலாளர் ஆர்.இராகுலநாயகி, மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் எந்திரி வை.கோபிநாத், மட்டக்களப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையத்தின் முகாமையாளர் எம்.சச்சிதானந்தம், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.ஜீவானந்தராசா, த.இதயகுமார் மற்றும் ஓய்வுநிலை அதிபர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், ஆலய பரிபாலன சபையினர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது வரவேற்புரையுடன் தலைமையுரையை அதிபர் இ.பாஸ்கர் அவர்களும், கவிஞர் கலைச்சுடர் க.தணிகாசலம் ஆசியுரையும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவனத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் நூல் அறிமுகவுரையையும் நிகழ்த்தியதுடன் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன் அவர்கள் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நாடகமும் அரங்கியலும் எனும் நூலானது மாணவர்களின் பாடப்பரப்பு கலை சார்ந்ததாக அமைந்தாலும் மாணவர்களின் ஆளுமையில் அதிக தாக்கம் செலுத்தும் ஒரு நூலாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நூலில் பாத்திரப் பண்புருவாக்கம், பாத்திர வகிபாகங்கள், அரங்க விளையாட்டுக்கள், சொல்லாடல், கைப்பொருள், சுதேச வாழ்வியற் சடங்குகளில் காணப்படும் ஆற்றுகைப் பண்புகள், கலையம்சங்கள், நாடக மோதுகைகள், காட்சிப் பின்னனிகள், பாரம்பரிய கூத்துக்கள், நவீன நாடகங்கள் போன்ற 34 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: