10 Jun 2019

பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம்

SHARE
பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் 
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் திங்கட்கிழமை (10) அவ்வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

மிக நீண்ட காலமாகவிருந்து இவ்வீதி குன்றும் குழியுமாக, காணப்படுகின்றது, இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு அதிகாரிகரிகளிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தும் அது இற்றைவரை நிறைவேறவில்லை. ஐ புறஜக்ற் திட்டத்தின் கீழ் இவ்வீதி செப்பனிடுவதற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தும் எந்தவித திட்டத்தினூடும் இவ்வீதி புணரமைப்புச் செய்யாமலுள்ளதாலும், அதிகாரிகள் இற்றைவரை இவ்வீதி புணரமைப்பு விடையத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காமையினையும், மக்கள் பிரதிநிகள் என கூறிக்கொண்டு வருபவர்கள் எமது மக்களின் இத்தேவையை கண்டும் காணாது போல் செயற்படுவதனாலும் நாம் வீதிக்கிறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

“காலங் காலமாய் எம்மை ஏமாற்றிப் பிழைக்காதே அரசே” , “வீதி அபிவிருத்தி அமைச்சே விரைந்து செய் உன் சேவையை” , “அபிவிருத்திக்கு அனுமதிக்கப்பட்ட வீதி மாற்றப்பட்டது ஏன்” ,  “அடைப்பு போடும் வீதி வேண்டாம் ஆரோக்கியமான வீதி வேண்டும்” , “அரசே உங்களுக்குத் தேவை வோட்டு ஆனால் எங்களுக்குத் தேவை றோட்டு” , போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மண்முனை தென்மேற்கு பிரதே சiயின் தவிசாளர் சி.புஸ்ப்பலிங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார் இதன்போது அவர் கருத்;துத் தெரிவிக்கையில்…

அரசாங்கம் மாத்திரமின்றி அதிகாரிகளும் எமது பிரதேசத்தை ஒதுக்குகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. இதனால் எமது பிரதேசத்தை கழிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகத்தான் கருதுகின்றார்கள் போல் எமக்குப் புலப்படுகின்றது. இலங்கையில் இருக்கின்ற பிரதேச சபைகளுள் எமது சபைக்குட்பட்ட பிரதேசத்தில் ஒரு காபட் வீதியும் இல்லை.  புணரமைப்புச் செய்யுமாறு  தற்போது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் வீதி எனது ஆயட் காலத்தில் இதுவரையில் செப்பணிடப்பட்டதாக நான் அறிந்திருக்கவிலலை. சிலவேளைகளில் கல்லைப்போடுவார்கள், கிறவலைப் போடுவார்கள், அது மழை காலத்தில் கரைந்து சென்று விடும். இந்த விடையம் தொடர்பில் இப்பிரதேசத்தின் பொறுப்புள்ள தவிசாளர் என்ற வகையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு பல தடவைகள் சென்று கதைத்திருக்கின்றேன். 

இவ்வீதி புணரமைப்புக்கு அனுமதி வந்துள்ளது விரைவில் கேள்வி மனுக்கோரவுள்ளோம் என தெரிவிக்கின்றார்கள் ஆனால் இதுவரையில் அது இடம்பெறவில்லை. கார்பிணித் தாய்மார்கள் வாகனங்களில் இவ்வீதியால் செல்கின்றபோது வாகனங்களில் பிரசவிக்கின்ற  நிலையும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன,  அவ்வாறு வீதி அபிவிருத்தித் திணைக்களம் இவ்விதியைப் புணரமைப்பதற்கு விரைவில் முன் வரும் பட்சத்தில் எமது எமது பிரதேச சபை சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கும். எனவே மிகவிரைவில் சம்மந்தப்பட்ட அதிகதரிகள் இவ்வீதியை விரைவில் புணரமைப்புச் செய்துதர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.






















SHARE

Author: verified_user

0 Comments: