10 Apr 2019

கொல்லநுலைப் பாடசாலையில் யோகாசன நிகழ்வு.

SHARE
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கிணங்க, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் யோகாசன நிகழ்வு புதன்கிழமை (10) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், கணக்காளர் ஏ.சிவகுமார், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான முருகேசபிள்ளை, ந.தயாசீலன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்கள் யோகாசனப்பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், யோகாசனம் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் குழுமுறையிலான யோகாசன காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன. 










SHARE

Author: verified_user

0 Comments: