18 Mar 2019

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ் தினப்போட்டிகள்

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ் தினப்போட்டிகள் திங்கட்கிழமை; (18)  கொக்கட்டிச்சோலை  இராமகிருஸ்ணமிசன் வித்தியாலத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஆக்கத்திறன் போட்டிகள் தவிர்ந்த ஏனைய தனி, குழுப் போட்டிகள் நடைபெற்றதாக கோட்ட தமிழ் தின போட்டிக்கான செயலாளர் பு.சதீஸ்குமார் தெரிவித்தார்.

இதன்போது, சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலைக்கு மாலையும் அணிவிக்கப்பட்டு, வணக்கமும் செலுத்தப்பட்டது. ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில், மண்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திவிதரன்,  க.குணசேகரம், அ.ஜெயக்குமணன், ரஞ்சிதமலர் கருணாநிதி மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 








SHARE

Author: verified_user

0 Comments: