காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 5, இல் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வயோதிபர் புதிய காத்தான்குடி 5, கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள அவரின் ஹோட்டலில் இருக்கும்போது அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
சூடுபட்ட முதியவர் ஸ்தலத்திலே சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.
பழனிபாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் பலியாகியுள்ளார்.
சம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரிசோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு குறித்த பிரதேசத்தில் பாதகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment