26 Jun 2018

விவேகானந்த பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா

SHARE
மட்டக்களப்பு கிரான்குளம் பிரதான வீதியோரமாக மூன்றரை ஏக்கர் பரப்பான காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள விவேகானந்த பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கட் கிழமை (25)  மட்டக்களப்பு மாவட்ட சமூக நலன்புரி  அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு ஆத்மீக அதிதியாக கலந்து சிறப்பித்த மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிறேமானந்தஜீ மகராஜ் அவர்கள் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைக்க, அதிதிகளாக கலந்து சிறப்பித்த அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடிக்கல்லை நாட்டி இப் பணியினை ஆரம்பித்து வைத்தனர்.

இப் பூங்காவில் சுவாமி விவேகானந்தரின் 25 அடி உயரமான திருவூருவ சிலையூடன் நிர்மாணிக்கப்படவூள்ள “விவேகானந்த இல்லம்” அமைக்கும் பணிக்கு தற்போது இலண்டனில் வசிக்கும் சமூக நலன்புரி அமைப்பின்; ஸ்தாபகர் க.சற்குணேஸ்வரன் காலம்சென்ற அவரது தாய் தந்தையின் நினைவாக நிதியூதவி வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: