26 Jun 2018

சீமெந்து ஏற்றி வந்த லொறி மரத்துடன் மோதி விபத்து

SHARE
சீமெந்து ஏற்றி வந்த லொறியொன்று வீதி மருங்கிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு - திருகோணமலை வீதி கண்டலடியில் திங்கட்கிழமை அதிகாலை  4 மணியளவில் 25.06.2018 இடம்பெற்ற இவ்விபத்தில்  லொறி சேதத்திற்குள்ளான அதேவேளை லொறிச் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
உதவியாளரின்றி தனியே லொறியைச் செலுத்தி வந்த சாரதி தூக்கக் கலக்கத்தில் லொறியைக் கட்டுப்பாட்டை மீறிச் செலுத்தி வீதி மருங்கிலிருந்த பெரிய நாவல் மரத்தில் மோதுண்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: