திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையின் கூட்டம் திங்கட்கிழமை 218.04.16 மதியம் 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.சலீம் தலைமையில் கூடியது. தலைவர் தெரிவுக்காக மருத்துவர் ஈ.ஜி.ஞாகுணாளன், சந்துன் ரத்நாயக்கா, க.கோணேஸ்வரநாதன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இதில் மருத்துவர் ஈ.ஜி.ஞாகுணாள் 15 வாக்குகளையும். சந்துன் ரத்நாயக்கா 5 வாக்குகளையும் பெற்றனர். க.கோணேஸ்வரநாதன் தனது தெரிவினை மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்களுக்கு வழங்கி இருந்தார்.
இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இச்சபையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பிரதி தலைவராக தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகிய கைலைநாதன் வைரவநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
0 Comments:
Post a Comment