ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகரில் ஹோட்டல் ஒன்றும் பல்பொருள் கடையும் சனிக்கிழமை இரவு எரித்தும் உடைத்தும் சேதமாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர்- மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலை கலைமகள் வித்தியாலய வீதிக்கு திரும்பும் சந்தியிலேயே இவ்வரு கடைகளும் உள்ளன.
இதனால் ஒரு கடை எரிந்து சேதமடைந்துள்ளதோடு, அருகிலுள்ள மற்றொரு கடையின் கண்ணாடி அலுமாரிகளும் உடைந்து காணப்பட்டுள்ளது.
வழமை போன்று சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கடை உரிமையாளர்கள் கடைக்கு வந்து பார்த்தபோதுதான், கடை எரிந்திருக்கும் சம்பவம் அறிந்து ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த ஹோட்டல் மூன்று நாட்களுக்கு முன்புதான் புதிதாக திறக்கப்பட்டது என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment