
கிழக்கு பல்கலையின் கலைகலாசார பீடத்திற்குரிய பீடாதிபதி தெரிவானது கலைகலாசார பீட அவையின் ஏகமான தெரிவின் அடிப்படையில் கடந்த 25.11.2016 அன்று நடைபெற்றதில் இம்முறை சிரோஸ்ட விரிவுரையாளர் முனியாண்டி ரவி கலைகலாசார பீடத்திற்கான பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
பேராதனிய பல்கலைகழகத்தில் மெய்யீயல் துறை பட்டதாரியான முனியாண்டி ரவி கிழக்கு பல்கலைகழகத்தில் சமூக விஞ்ஞான கற்கைகள் துறைக்கான தலைவர், கல்வி பிள்ளை நலத்துறை பதில் தலைவர், அறபுத்துறை பதில் தலைவர், சிரேஸ்ட மாணவ ஆலோசகர், விளையாட்டு ஆலோசகர் சபையின் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
பல்கலைகழக பீடங்களுக்குரிய பீடாதிபதிகளுக்குரிய பதவிக் காலம் மூன்று வருடங்கள் என்பதால் கடந்த மூன்று வருடத்திற்கான கலைகலாசார பீடத்திற்குரிய பீடாதிபதியாக கலாநிதி கந்தையா ராஜேந்திரம் கடமையாற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற கலைகலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதி கடமையைப் பெறுப்பேற்கும் நிகழ்வுக்கு முன்னனாள் பீடாதிபதி உட்பட பல்கலைகழகத்தின் துறைத் தலைவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் சர்வ மத வழிபாட்டுடன் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment