ஏறாவூர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கண்டு பிடிக்கப்பட்ட அதி சக்தி வாய்ந்த 40 மில்லிமீற்றர் குண்டுகள் அதிரடிப்படை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் விசேட நிபுணர்களினால் வியாழக்கிழமை (நொவெம்பெர் 10, 2016) செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை தீவு பகுதியில் பனை மரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 40 மில்லிமீற்றர் குண்டுகள் மூன்றைத் தகவலொன்றின் பேரில் புதன்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்தக் குண்டுகள் பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றினுள் மிகவும் பாதுகாப்பான முறையில் சுற்றப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக அம்பாறை மாவட்டம் அருகம்பையிலிருந்து அதிரடிப்படையின் குண்டுகள் செயலிழக்கச் செய்யும் பிரிவின் பரிசோதகர் லால் ஜயதிலக்க தலைமையிலான விசேட நிபுணர்கள் குண்டுகளைச் செயலிழக்கச் செய்தனர்.
0 Comments:
Post a Comment