சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு களுதாவளை விபுலானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு வீதி ஊர்வலம்
நடைபெற்றது. இதன்போது சிறார்கள், பெற்றோர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சிறுவர் உரிமையை மதிப்போம், சிறுவர் உரிமையைப் பாதுகாப்போம், உங்கள் சொத்து நாங்களே, எங்கள் மகிழ்ச்சியை கல்லில் செதுக்குங்கள், உங்கள் இளவரசர்களும் இளவரசிகளும் நாங்களே, எங்கள் உலகில் எங்களை இயல்பாக வாழவிடுங்கள், சிறுவர் நலத் காப்போம்,போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இச்சிறார்கள் வீதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
இவ்வீதி ஊர்வலம் பாலர் பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, தேவாலய வீதியூடாகச் சென்று வன்னியார் வீதியூடாக மீண்டும் பாலர் பாடசாலையைச் சென்றடைந்தது. இந்நிலையில் கிராம மக்கள் சிறார்களுக்கு, சிற்றுண்டிகள், இனிப்புப் பண்டங்கள், குளிர் பாணங்கள் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
0 Comments:
Post a Comment