(க.விஜி)
கடந்த மாதம் நாடாளவிய ரீதியில் நடைபெற்ற புலமைபரீட்சைக்கான (2016 ஆம் ஆண்டுக்கான)வெட்டுப்புள்ளிகளின் படி151புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியில் 28மாணவர்கள்
சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற புலமைப்பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இலங்கை பரீட்சைத்திணைக்களத்தினால் செவ்வாய் கிழமை (04)
வெளியாகியது. இப்பரீட்சைக்கு தோற்றிய 105 மாணவர்களில் நூறுபேர் சித்தியடைந்துள்ளனர். இப்பரீட்சை பெறுபேறானது வரலாற்றுச்சாதனையாகும்.
கடந்த வருடத்துடன் ஒப்பீட்டு நோக்கும் போது இரடிப்பு பெறுபேறாக காணப்படுகின்றது. இது பாடசாலைக்கும்,பாடசாலை சமூகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகுமென அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு…. பா.தனுஜன்(183), என்.எம்.நஹ்தி(181), நி.லதுமிதன்(174), ஜெ.ருதேஸ்(173), த.சஞ்ஜித்(170), தி.ரிஷிதர்(159), ஜெ.திக்சயன்(159), தே.சுஜாங்கன்(157), லோ.மோஸஸ்(156), ஜெ.சகீதன்(156), வி.ஸ்வாத்மிகன்(156), து.அனுருத்தன்(159), ச.அக்சரன்(155), ர.கனிஷ்வர்(155), ஏ.ஏ.சுரைப்(154), ச.டிருக்சன்(153), ர.வித்தியாசிகன்(156), ரா.கதுசான்(152), அ.தேவகரிதாஸ்(153), சு.கிபிஷாந்(157),
லோ.ரனேஸ்(181), மு.ருக்சதன்(153) , பீ.சஞ்சய்(157), சி.சஜந்த்(163), சு.பவிசாந்(154), ர.லிலுக்ஸன்(156), இ.தர்ஷாந்(155), கோ.சஜிகரன்(161) ஆகிய மாணவர்களேயாகும்.
இவ்மாணவர்களை அர்ப்பணிப்பு, தியாகசிந்தனை,நேரமுகாமைத்துவத்துடன் புலமையாளர்களாக உருவாக்கிய ஆசிரியர்களான எஸ்.சிற்சபேசன்,திருமதி ரேணுகா மனோரஞ்சன் ஆகியோர்களுக்கு அதிபர், பிரதி அதிபர்,பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழையமாணவர் சங்கம்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் தங்களின் வாழ்த்துக்களை பாடசாலையில் வைத்து தெரிவித்தார்கள்.
0 Comments:
Post a Comment