16 Aug 2016

காத்தான்குடியில் நான்காவது சந்தை திறந்து வைப்பு

SHARE
காத்தான்குடிப் பிரதேசத்தில் 4வது சந்தை ஞாயிற்றுக்கிழமை
(ஓகஸ்;ட் 14, 2016) திறந்து வைக்கப்பட்டது.

புதிய காத்தான்குடி முதலாம் குறிச்சி பதுரியா ஜும்ஆ பள்ளி நிருவாகத்தினால் அமைக்கப்பட்ட 'பதுரியா சந்தை” திறந்து வைக்கப்பட்டதன் மூலம் பிரதேசத்தின் வியாபாரிகளும் நுகர்வோரும் நன்மையடைவார்கள் என பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இப்பிரதேச வியாபாரிகள் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கைளை மேற்கொண்டனர். இதனால் வீதியில் பயணிப்போருக்கு இடைஞ்சலாக இருந்தது. இதனைக் கருத்திற்கொண்டு பள்ளிவாயல் நிருவாகம் வியாபாரிகளுக்கான சந்தை ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: