மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை வட்டிக் குளக்கட்டு அத்தியடி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவமும் தீர்த்தோற்சவமும்.
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை வட்டிக் குளக்கட்டு அத்தியடி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவமும் எதிர்வரும் வியாழக் கிழமை (04) ஆரம்பமாகி ஞாயிற்றுக் கிழமை (07) காலை சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
வியாழக் கிழமை (04) முதலாம் நாள் அலங்காரத்திரு விழாவும், இரண்டாம் நாள் திருவிழாவான வெள்ளிக் கிழமை(05) களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடப்பவனியும், மூன்றாம் நாள் திருவிழாவான சனிக்கிழமை(06) 108 பானை விசேட பொங்கலுடன் பால்வார்க்கும் நிகழ்வும் கலை நிகழ்வும் இடம்பெற்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(07) காலை 8 மணியளவில் களுதாவளை சமுத்திரத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 9 ஆம் திகதி வைரவர் பூஜையும் இடம்பெறும். திருவிழாக் காலங்களில் சுவாமி வீதி வலம் வருதல், கூட்டுப்பிரார்த்தனை, மேள தாள வாத்தியக் கச்சேரி, என்பனவும் இடம்பெறவுள்ளன.
ஆலய கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சோதிட திலகம் கிரியாயோதி சிவ ஸ்ரீ வே.கு.சபாநாயகக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.
0 Comments:
Post a Comment