அதிகரித்துவரும் சாலை விபத்துக்களை கருத்திற் கொண்டு காத்தான்குடி பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை இரவு (ஒகஸ்ட் 09, 2016) பொதுமக்களுக்கு
விபத்துக்கள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
சாரதிகள், பாதசாரிகள் மற்றும் வீதியில் பயணிப்போர் மிகக் கவனயீனமாக நடந்துகொள்வதால் நாளாந்தம் காத்தான்குடி நகர பிரதேசத்தில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
இதனைக் கருத்திற் கொண்டே இந்த அவசர விழ்ப்பூட்டலை ஏற்பாடு செய்திருந்ததாக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழிப்பூட்டலில் சமீப சில நாட்களில் இலங்கையில் இடம்பெற்று பதிவான பாரிய சாலை விபத்துக்களும் அவ்விபத்துக்கள் ஏற்பட்டமைக்கான சாரதிகள் மற்றும் பாதசாரிகள், பயணிகளின் தவறுகளையும் உணர்த்தும் வகையில் வெண்திரையில் படிப்பினையூட்டும் அனுபவக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment