இலங்கை திருநாட்டில் சிறப்புற்று விளங்கும் சுயம்பு லிங்க ஆலயங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்
ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் எதிர்வரும் 03.09.2016 அதிகாலை 4.30மணிக்கு இடம்பெற்று தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஆலயத்திருவிழாவும்,
08.09.2016ம் திகதியில் இருந்து குடித்திருவிழாக்களும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து. 18.09.2016ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் தேரோட்டமும் அன்றிரவு முனைக்காடு வீரபத்திரர் ஆலய முன்றலில் திருவேட்டையும் மறுநாள் காலை(19.09.2016) தீர்த்தோற்வத்துடன் ஆலய மகோற்சவம் நிறைபெறவிருப்பதாக ஆலய வண்ணகர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment