14 Aug 2016

கோட்டைக் கல்லாற்றில் இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா.

SHARE
(இ.சுதா )

ஈழ திருமணி நாட்டின் திருவருட் செல்வங்கள் நிறைந்து விளங்கும் மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் தெற்கே ஓடையும் இரு புறமும் அழகுமிகு பாலங்களும் அரணாய்ச் சூழ்ந்த அழகிய சைவ உயர் நெறியாளர்கள்
 நிறைந்து விளங்கும் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் அலய பஞ்ச குண்ட பஷ்ச பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா நிகழ்வு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை நிறைவு பெறவுள்ளது.

கிரியா கால நிகழ்வுகளாக 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை மாலை 5 மணி வரைக்கும் பூர்வாங்கக் கிரியைகள் நடைபெற்று அன்றைய தினம் இரவு 8 மணி முதல் 10 மணி வரையுள்ள காலப்பகுதியில் திருமணமாகிய பெண்களும், திருமணமாகாத பெண்களும் இணைந்து செய்யும் தீப பூசை நடைபெற்று,

20 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் பக்தர்கள் தரிசனப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்புச் சாத்தும் நிகழ்வு இடம் பெற்று 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமைகாலை 7 மணி முதல் லக்ஷிமி கணபதி பிரார்த்தனையிதை தொடர்ந்து அன்றைய தினம் 9.05 மணி மதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் தேவர்கள் பூமாரி பொழிய சூரியன் அனுக்கிரகம் கிடைக்க எல்லாம் வல்ல அம்பாரைவில் பிள்ளையாரின் அருளோடு பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெரு விழா இனிதே நிறைவு பெறவுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: