7 Aug 2016

ஆற்றலுள்ள இளைஞர் யுவதிகளைத் தேர்வு செய்வதற்கான செயற்பாட்டு நேர்காணல்

SHARE
இவ்வாண்டில் இடம்பெறவுள்ள ஆற்றலுள்ள இளைஞர் யுவதிகளின் செயற்பாட்டுக்கு (லுழரவா புழவ வுயடநவெ) ஆற்றலு
ள்ள இளைஞர் யுவதிகளைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் மட்டக்களப்பில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 06, 2016) இடம்பெற்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்ற இந்த செயற்பாட்டு வெளிப்படுத்துகைத் தேர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்வேறு ஆற்றல்களை வெளிப்படுத்திய 82 பேர் கலந்து கொண்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் தெரிவித்தார்.

ஆற்றல் வெளிப்பாட்டுத் தேர்வில் கலந்து கொண்டவர்களிலிருந்து 10 பேர் தேசிய மட்டத் தெரிவுக்கு அனுப்பப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
தேசிய மட்டத்தில் 360 இளைஞர் யுவதிகளிடையே இரண்டாவது சுற்றுத் தேர்வு இடம்பெறும். அதிலிருந்து 30 பேர் இறுதிச் சுற்றுத் தெரிவுக்குத் தகுதி பெறுவர்.
இறுதிச் சுற்றில் தெரிவாகுவோரிலிருந்து 10 பேர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவர்களில் முதலாவது ஆற்றலுள்ள இளைஞன் அல்லது யுவதிக்கு 20 இலட்ச ரூபாவும், இரண்டாவது திறமையாளருக்கு 10 இலட்ச ரூபாவும், மூன்றாவது நபருக்கு 5 இலட்சமும் ஏனைய ஏழு பேருக்கும் தலா ஒரு இலட்சமும் வழங்கப்படவுள்ளது.













SHARE

Author: verified_user

0 Comments: