மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 20, 2016) வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்து காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி சேர் றாசிக் பரீட் மாவத்தையில் (பழைய தண்ணித்தாங்கி அருகாமையில்) மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கரவண்டியும் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மூவரும் உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் துவிச்சக்கரவண்டியில் சென்று படுகாயங்களுக்குள்ளான முஹம்மது சஜாஹி (வயது-13) எனும் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment