(U. L.M.றியாஸ்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த ஒன்று கூடல் நேற்று
(01.05.2016) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஒன்று கூடலின் போது அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதேவேளை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சிறந்த முறையில் தமது ஊடகப் பணியை மேற்கொள்ளும் பொருட்டு துறை சார்ந்தவர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புக்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
இப் பயிற்சி வகுப்புகளை அரச ,அரச சார்பற்ற நிறுவனம்களின் அனுசரைகளுடன் நடாத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. . இதன் ஒரு அங்கமாக மே மாதம் 8ம் திகதி கல்முனையில் சட்ட உதவி தொடர்பான முழுநாள் பயிற்சி பாட்டரை ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளும்
செய்யப்பட்டது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுச் சபையின்
அங்கீகாரத்துடன் நிறைவேர்ரப்பட்டதுடன் ஊடகவியலாளர்கள் ஐந்து பேரும் பொதுச் சபையின் அங்கீகாரத்துடன் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment