இளம் இசை அமைப்பாளர் சஞ்சித் லக்ஸ்மன் அவர்கள் தன் குழுவினரோடு இந்த கீதத்தை மட்டக்களப்பு பிரதேசத்துக்கான அதிகாரபூர்வமான கீதமாக இங்கே பதிவு செய்திருக்கின்றார்.இந்த முயற்சிக்கு முதலில் அவருக்கும் அவர் குழுவினருக்கும் வாழ்த்துகள்.
ஆனால் ஒரு பெரிய விசயத்தை செய்யும்போது செவ்வனே செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் அதுக்கு பலதரப்பினரின் பாராட்டு கிடைக்கும். இந்த கீதத்தில் பல
கேள்விகள் எனக்கு இருக்கின்றன.முதலில் மட்டக்களப்பு பிரதேசம் பற்றி முதலில் 1960 களில் ஜீவம் சகோதர்கள் இசையமைத்து பாடிய “மீன்பாடும் வாவியிலே ஓடம் விடுவோம்” என்றபாடல் தான் வெளிவந்தது என்று நினைக்கின்றேன். அதனை தொடர்ந்து காசி.ஆனந்தன் அவர்கள் எழுதி ஜீவம் சகோதர்கள் இசையமைத்து பாடிய”மீன்மகள் பாடுகிறாள் வாவிமகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா” என்ற பாடல்.அதன்பின்
ஆதவன் இசைகுழு அதன் மேடைகளில் பாடிய “மாநகராம் மட்டு மாநகராம்” என்ற பாடல். அதைத்தொடர்ந்து ஜெயாலயா இசைக்குழுவினர் அவர்கள் மேடையில் பாடிய “வெள்ளி நிலவினிலே ஓடம் விடுவோம் துள்ளும் அலைகளிலே கீதம் இசைப்போம்” என்ற பாடல்கள் மட்டுநகரின் சிறப்பு, வளங்கள், கலைகள்,வழிபாடுகள்,
பெண்களின் தனிச் சிறப்பு, இன ஒற்றுமை,வயல்,வாவி,
கடல்,மண் தந்த மாமனிதர் என்று பல அம்சங்களை தாங்கி
மட்டுநகர் என்ற எல்லைக்குள்ளேயே இருந்தன. மட்டக்களப்பு பிரதேசம் வரை அது எட்டவில்லை.ஆகவே இந்த மட்டக்களப்பு பிரதேசத்துக்கு ஒரு அதிகாரபூர்வ கீதம் செய்ய நினைத்தால் அது பல விடயங்களையும் உள்வாங்கி செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த கீதம் அப்படி செய்யப்பட்டதாக எனக்கு படவில்லை.செய்தது தவறு என்று சொல்லவில்லை.அதில் தவறு இல்லாமல் செய்யவேண்டும் என்பதே கருத்தாகும்.இந்த பாடலில் குறிப்பிடும் நான்கு இன மக்கள்,ஆரியக் கலையான பரதநாட்டியம், இரும்பு பட்டறை, போன்றவை மட்டக்களப்பு மண்ணுக்கு உரித்தானதா என்ற கேள்வி எழுகின்றன.மற்றது பாடல் பாடிய விதம்.பாடகர் சரியான சுருதியில் பாடுகிறாரா என்பதை இசையமைப்பாளர் கண்டு கொள்ளவில்லையா? அவருக்கு பஞ்சமதுக்கு போவதே கஷ்டமாக இருக்கிறதே.அப்படி அவருக்கு முடியவில்லை என்றால் சுருதி குறைத்து பாடி இருக்கலாம்.இப்படி பல விஷயங்கள் இந்த பாடலில் எனக்கு படுகின்றது. மக்களே நீங்களும் கேளுங்கள் உங்கள் கருத்துகளையும் கூறலாம்.இந்த முயற்சி நல்லது.முறையாக செய்திருந்தால் முழுமையான பாராட்டு கிடைத்திருக்கும் என்பது என் கருத்தாகும்.
( tx supedsam)
0 Comments:
Post a Comment