18 Apr 2016

மருதமுனை ‘எலைவ்’ (Alive) சமூகசேவைள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல்

SHARE
(டிலா)

இன்றைய சூழலில் இளைஞர்கள் சமூகசேவையில் ஈடுபட முன்வந்திருப்பது பாராட்டத்தக்கதாகும். என இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.எம்.ஹாறுன் தெரிவித்தார். மருதமுனை ‘எலைவ்’ சமூகசேவைள் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் (16.04.2016) மாலை அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம்.ஜெ.ஜாவித் நிஸாத் தலைமையில்
மருதமுனை அலுவலகத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்
இன்று இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கம் குறைந்துகொண்டு செல்கிறது. இளைஞர்கள் சமூகசேவையின் பக்கமிருந்து விலகிச்செல்கின்றனர். இங்கிருக்கும் இளைஞர்கள் அரசியல் பின்புலமில்hமல் சுயாதீனமாக செயல்பட வேண்டும்.
கிராமத்திலிருக்கின்ற வறிய, பாதிக்கப்பட்டவர்களை இனம்கண்டு அவர்களுக்கு உதவிசெய்ய முன்வரவேண்டும்.
சமூகத்துக்கும், இளைஞர்களுக்கும் உதவி செய்வதன்மூலம் தங்களை வளர்த்துக் கொள்ளமுடியும். சமூக சேவையை பொறுத்தவரையில் இதில் விருப்பம் வருவது போல் வேறுப்பும் வரும் இந்த சந்தர்ப்பங்களில் மனம் தளராமல் தன்னமபிக்கையுடன் கூட்டுப் பணியாக முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இளைஞர்களுக்காக அரசு முன்னெடுக்கும் திட்டங்களில் இங்கிருக்கும் இளைஞர்களையும் உள்வாங்கி முடியுமான பங்களிப்பை வழங்கமுடியும் எனக்கூறினார்.
நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.சனா அஹமட், பொருளாளர் எம்.எம்.முகம்மட் சிஹாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: