24 Apr 2016

பழபழப்பாக்கப்பட்ட கொத்தமல்லி 10 ஆயிரம் கிலோகிராம் கைப்பற்றப்பட்டது

SHARE
பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் கொத்தமல்லி ஏற்றி வந்த லொறியொன்று சனிக்கிழமை கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பழுதுபட்டுப்போனதால் அதன் இயற்கைத் தன்மையை மாற்றி செயற்கையான முறையில் பழபழப்பாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்காக இந்த கொத்தமல்லி ஏற்றிவரப்படுகின்றது என்று தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒவ்வொன்றும் தலா 400 கிலோகிராம் கொண்ட 25 கொத்தமல்லி மூடைகள் லொறியொன்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட லொறியிலிருந்த கொத்தமல்லியின் மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டு அவை கொழும்பிலுள்ள வைத்திய ஆய்வு நிறுவகத்துக்கு (ஆநனiஉயட சுநளநயசஉh ஐளெவவைரவழைn) அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கொத்தமல்லியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் புலேந்திரகுமார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள வைத்திய ஆய்வு நிறுவகத்தில் வைத்து இவை கலப்படம் செய்யப்பட்டதா, மனித நுகர்வுக்கு உகந்ததா, பழுதுபட்டதால் பழபழப்பாக்கப்பட்டதா என்று பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் பின்னர் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புலேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: