26 Dec 2015

களுதாவளை உதயதாரகை இந்து மன்றம் நடாத்தும் கௌரவிப்பும், பாராட்டு விழாவும்

SHARE
மட்டக்களப்பு  - களுதாவளை உதயதாரகை இந்து மன்றம் நடாத்தும் கௌரவிப்பும், பாராட்டு விழாவும், ஞாயிற்றுக் கிழமை (27) பி.ப.2.30 இற்கு இடம்பெறவுள்ளது.
இதன்போது கலாபூசணம் விருது பெற்ற இரா.நல்லையா அவர்களையும், 2015 ஆம் ஆண்டு ஐந்தம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், பாராட்டுக்களும், பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப் படவுள்ளதோடு கலை நிகழ்வுகளும், இடம்பெறவுள்ளன.

உதயதாரகை இந்து மன்றத்தின் தலைவர் வீ.சசிகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை நீர்ப்பாசன கால்நடை உற்பத்தி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன், கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை  அமைச்சின் செயலாளர் க.கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, கிழக்கு மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சீ.கணேசலிங்கம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராசா, சிறைச்சாலை அதிகாரி இ.இராஜேஸ்வரன், வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன், கல்முனை கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் வே.மயில்வாகனம், மட்டக்களப்பு கச்சேரியின் பிரதம கணக்காளர் ச.நேசராசா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கணக்காளர் இ.கார்திகேசு, 

மற்றும், அகில இலங்கை இந்துப்பேரவையின் தலைவர் ( சிரேஸ்ட சட்டத்தரணி) க.ஞானசேகரம், திருகோணமலை மக்கள் வங்கியின் உதவிப் பிராந்திய முகாமையாளர் வே.குணரெத்தினம், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சு.சிவரெத்தினம், கிழக்குப் பல்கலைக் கழக பதில் பதிவாளர் அ.பகீரதன் உட்பட ஆலய பரிபாலனசபை நிருவாகத்தினர், பாராட்டுப் பெறுபவர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக உதயதாரகை இந்து மன்றத்தின் தலைவர் வீ.சசிகுமார் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: