(இ.சுதா)
மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு றோசாலியா சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் நடைபெறும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆங்கில சொல்வதெழுதல் போட்டி திங்கட் கிழமை (09) பெரியகல்லாறு மத்தியகல்லூரியில் இடம்பெற்றது.
இதில் பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய மாணவர்கள் இரு முதலாம் இடங்களை பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை, பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள்; பங்கு கொண்ட இப்போட்டியில் தரம் ஆறு முதல் பத்து வரையிலான வகுப்பு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ஆங்கில மொழியிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் குழு நிலையிலான போட்டிகள் இடம் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பதக்கங்கள் மற்றும் சின்னம் என்பன றோசாலியா சமூக சேவை ஒன்றியத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment