அரசாங்கத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் 2015 க்கான மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை (08) அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
போதைவஸ்துப் பாவனையினால் இளைய சமுதாயம் அழிந்து கொண்டிருக்கின்றது. இளைய சமுதாயத்தை அழிக்கின்ற ஒரு வியாபாரமாக போதைவஸ்து வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இந்நிகழ்வின் போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்டவை இடம்பெறுவதற்கும் அடிப்படைக் காரணம் போதைவஸ்துப் பாவனையே ஆகும்' என்றார். 'மேலும், மட்டக்களப்பபு மாவட்டமானது அதிக மதுபானப் பாவனையுள்ள மாவட்டமாக காணப்படுவதுடன், வறுமைக்கு உட்பட்டுள்ள மாவட்டமாகவும் உள்ளது. ஒரு இலட்சத்து எண்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொழிலற்றவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்' என்றும் அவர் கூறினார்.இதன்போது, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு நாடகம், மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியரது விளக்கமளிப்பும் நடைபெற்றது. இதில், பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், வாழ்வின் எழுச்சித்திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கலால் திணைக்கள் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment